Published : 05 Mar 2021 03:17 AM
Last Updated : 05 Mar 2021 03:17 AM
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மார்ச் 7-ம் தேதி நடைபெற உள்ள பூச்சொரிதல் விழாவையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்து திருச்சி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண் காணிப்பாளர் த.ராஜன் தெரிவித்துள்ளது:
சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி, மார்ச் 7-ம் தேதி காலை 8 மணி முதல் 8-ம் தேதி பிற்பகல் 2 மணி வரை போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, திருச்சியிலிருந்து சேலம் நோக்கிச் செல்லும் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் புறநகர் பேருந்துகள் குடமுருட்டி பாலம், ஜீயபுரம், பேட்டைவாய்த்தலை, குளித்தலை, முசிறி, தொட்டியம், நாமக்கல் வழியாகச் செல்ல வேண்டும். சேலம் மற்றும் நாமக்கல்லிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் இந்த வழித்தடத்திலேயே திருச்சிக்கு வர வேண்டும்.
திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையி லிருந்து திருச்சி வழியாக சென்னை நோக்கிச் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மணப்பாறை ஆண்டவர் கோயில் சோதனைச்சாவடியிலிருந்து குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்ப லூர் வழியாகச் செல்ல வேண்டும்.
மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை நோக்கிச் செல்லும் வாகனங் கள் லஞ்சமேடு கைகாட்டி வழியாக மணப்பாறை, ஆண்டவர் கோயில் சோதனைச் சாவடி, குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாகச் செல்ல வேண்டும்.
திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டையிலிருந்து சென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் கொள்ளிடம் ஒய் ரோடு அருகிலிருந்து கொள்ளிடம் ரவுண்டானா, நொச்சியம், மண்ணச்சநல்லூர், அய்யம்பாளையம், எதுமலை சந்திப்பு, திருப்பட்டூர் பிரிவு சாலை, சிறுகனூர் பிரிவு சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர், அரியலூர், புள்ளம்பாடி, லால்குடி, கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் புதிய பாலம் அல்லது தச்சங்குறிச்சி, குமுளூர், பூவாளூர் சந்திப்பு, லால்குடி சந்திப்பு, கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் புதிய பாலம் வழியாக திருச்சிக்கு வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT