Published : 05 Mar 2021 03:17 AM
Last Updated : 05 Mar 2021 03:17 AM
திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட ரிக் (போர்வெல் லாரி) உரிமையாளர் கள் சங்கத்தினர் 4 நாட்கள் வேலை நிறுத்தத்தை நேற்று தொடங்கினர்.
போர்வெல் லாரிகளை இயக்கு வதற்குத் தேவையான டீசல், பிவிசி குழாய், இரும்புக் குழாய் மற்றும் போர்வெல் அமைக்கத் தேவைப்படும் உதிரிப் பாகங்கள் ஆகியவற்றின் கடுமையான விலை உயர்வு காரணமாக தற்போது கிடைக்கும் கட்டணம் போது மானதாக இல்லை. எனவே, புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து, அந்தக் கட்டணத்தில் மட்டுமே இனி போர்வெல் அமைத்துத் தரப்படும் என்பதை கட்டிடப் பொறியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் இந்த வேலைநிறுத்தத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையொட்டி, திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள கிரஷர் பகுதியில் 25-க்கும் அதிகமான போர்வெல் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர். இந்தப் போராட்டத்தை ஜெ.ஜெயராமன், எம்.அப்துல்லா, ஏ.அப்துல் ஹாதி, எஸ்.பி.பெரியராசு, எஸ்.எஸ்.குட்டி ஆகியோர் ஒருங்கிணைத் துள்ளனர்.
போராட்டம் குறித்து ஜெயராமன், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: போர்வெல் அமைக்க பயன்படுத்தப்படும் பிவிசி குழாய்கள் விலை 70 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏமர், பிட் ஆகியவற்றின் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல, போர்வெல் லாரிகளை இயக்குவதற்குத் தேவையான டீசல் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், எங்களால் ஏற்கனவே உள்ள கட்டணத்தில் போர்வெல் லாரிகளை இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே, தற்போது வசூலிக்கும் கட்டணத்தைவிட 20 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி, புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவிக்கும் நோக்கில் 4 நாட்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளோம். இதன்காரணமாக திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத் தில் எந்த போர்வெல் லாரியும் இயங்காது.
இனி புதிய கட்டணத்தில் மட்டுமே போர்வெல் அமைக்கப்படும். வேலை நிறுத்தம் காரணமாக போர்வெல் லாரி தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு நேரிட்டாலும், 4 நாட்களுக்கும் உரிய ஊதியத்தை வழங்கவும் முடிவு செய் துள்ளோம்.
விலைவாசி உயர்வு குறித்து அனைத்துத் தரப்பினரும் நன்கு அறிந்துள்ளனர். எனவே, எங்களது நியாயமான போராட்டத்துக்கு பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பின ரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT