Published : 05 Mar 2021 03:17 AM
Last Updated : 05 Mar 2021 03:17 AM
திருச்சி புத்தூரில் உள்ள குழு மாயி அம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற குட்டிக்குடி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாக்களை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
திருச்சி புத்தூரில் உள்ள குழுமாயி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் குட்டிக்குடி திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழாவையொட்டி, பிப்.16-ம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் 1-ம் தேதி திருவிழா தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதை யொட்டி, குழுமாயி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் புத்தூர் மந்தையில் எழுந்தருளினார். அங்கு ஆட்டுக்கிடாக்களின் ரத்தத்தைக் குடித்து மருளாளி அருள்வாக்கு கூறினார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆட்டுக்கிடாக்களை கொண்டு வந்து பலியிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதைத் தொடர்ந்து இன்று (மார்ச் 5) மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை (மார்ச் 6) அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT