Published : 04 Mar 2021 05:53 AM
Last Updated : 04 Mar 2021 05:53 AM
திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டையம்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால், அந்த இடத்திலுள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எனவே விறகுப்பேட்டை, மகாலெட்சுமி நகர், மலைக்கோயில், நேருஜி நகர், அரியமங்கலம் உக்கடை, ஜெகநாதபுரம், மலையப்ப நகர், ரயில் நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்தர் நகர், ஜே.கே.நகர், மேலகல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறை, சுப்பிரமணியபுரம், விமான நிலையம், காமராஜ் நகர், செம்பட்டு, காஜா நகர், காஜாமலை, கே.கே.நகர், தென்றல் நகர், ஆனந்த் நகர், சத்தியவாணி முத்து நகர், ஐயப்ப நகர், எடமலைப்பட்டி புதூர், கே.சாத்தனூர், அன்புநகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர், கிராப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (மார்ச் 5) குடிநீர் விநியோகம் இருக்காது.
எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT