Published : 03 Mar 2021 03:29 AM
Last Updated : 03 Mar 2021 03:29 AM
திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் வெற்றி உறுதியேற்பு பேரணி திருச்சியில் நேற்று நடைபெற்றது. சிந்தாமணியிலுள்ள தேசியக்கல்லூரி பள்ளி மைதானத்திலிருந்து பாஜக மாநில இணைப் பார்வையாளர் சுதாகர் ரெட்டி பேரணியைத் தொடங்கி வைத்தார். அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வழியாக வந்து தேவர் ஹால் அருகே பேரணி நிறைவுபெற்றது. அதைத்தொடர்ந்து மேலரண் சாலையில் திருச்சி கிழக்கு தொகுதி பாஜக தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. நிர்வாகிகள் குட்டி பத்மினி, மதுவந்தி, மாநகர் மாவட்டத் தலைவர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT