Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM
கோவை-பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி அருகேயுள்ள தனியாருக்குச் சொந்தமான கிடங்கில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டு, கேரளாவுக்கு கடத்திச் செல்லத் திட்டமிட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் ராம.துரைமுருகனுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், மதுக்கரை வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் அந்தக் கிடங்கில் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமான மூட்டைகளில் 7.20 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தது யார், எங்கிருந்து அவற்றை வாங்கினர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பொள்ளாச்சி உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT