Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM
மதுரையில் கனரா வங்கி சார்பில் வீடு, வாகனக் கடன் வழங்கும் முகாம் நாளை(மார்ச் 2) நடக்கிறது.
மதுரை கனரா வங்கி வட்ட அலுவலக துணைப் பொது மேலாளார் மாதவராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கனரா வங்கி சார்பில் வீடு, வாகனம், கல்வி மற்றும் அடமானக் கடன் வழங்கும் முகாம் மதுரை காமராஜர் சாலை வி.எஸ். செல்லம் மஹாலில் மார்ச் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் சம்பளப் பட்டியல், வருமானவரி மற்றும் அடையாளச் சான்றுகளை கொடுத்து வீட்டுக்கடன் பெற தகுதித் தொகை, கடனுதவித் திட்டங்கள் குறித்து அறியலாம். வீட்டின் பத்திரம், மூலப் பத்திரம், திட்ட வரைபடம், உத்தேசத் திட்ட மதிப்பீடு இருப்பின் அதே இடத்தில் வழக்கறிஞர், கட்டிடப் பொறி யாளர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் வாகன, கட்டிட உரிமையாளர்களை சந்திக்கலாம். கடன் அனுமதி ஆவ ணம் உடனே வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT