Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

சரக்கு ரயிலில் சலுகை கட்டணத்தில் காய்கறிகள், பழங்கள் அனுப்ப ஏற்பாடு

கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் விளக்கம் அளித்த ரயில்வே அதிகாரிகள்.

மதுரை: சரக்கு ரயிலில் சலுகை கட்டணத்தில் காய்கறிகள், பழங்களை அனுப்பலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை விவசாயக் கல்லூரியில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் பல்வேறு அம்சங்கள் அடங்கிய அரங்குகள் இடம் பெற்றிருந்தன. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின் உத்தரவின்பேரில், ரயில்வே வர்த்தகப் பிரிவு சார்பில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த அரங்கில் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சரக்கு ரயிலில் சலுகை கட்டணத்தில் அனுப்புதல், பயணிகள் ரயில்களில் பார்சல் வேன்களில் விளைபொருட்கள் மற்றும் தயாரிப்புகளை விரைவாக அனுப்புதல் உள்ளிட்டவை கண்காட்சியைக் காண வந்த விவசாயிகள், உணவு தயாரிக்கும் நிறுவனத்தினர், வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் வி.பிரசன்னா, கோட்ட வர்த்தக மேலாளர் டி.எல்.கணேஷ் மற்றும் அலுவலர்கள் விளக்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x