Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM
புதுச்சேரியில் காங்கிரஸ் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற வைத்திலிங்கம் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்ட ணிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாகஇருக்கிறது. நிலையான ஆட்சியை நாங்கள் கொடுத்துள் ளோம். புதுச்சேரியின் சுதந்தி ரத்தை காக்கும் கட்சி காங்கிரஸ். மக்கள் விரும்பும் அரசாக காங் கிரஸ் கூட்டணி அரசு அமையும்.
வாக்களித்த மக்களுக்கு எதிராக ஜனநாயகப் படுகொலை செய்துள்ளதை ஏற்க முடியாது. தாங்கள் வாக்களித்து தேர்வு செய்த எம்எல்ஏக்கள் தான் செயல்பட வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். நியமன எம்எல்ஏக்களைக் கொண்டு ஆட்சியை கலைத்ததால் மக்கள் கோபத்துடன் உள்ளனர்.
சட்டப்பேரவை வாக்கெடுப் பின்போது தவறான தீர்ப்பு வழங்கிய பேரவைத் தலைவரை கடுமையாக விமர்சித்து வரு கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT