Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

மேம்படுத்தப்பட்ட குளங்கள் திறப்பு

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழாவுக்காக 52 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள குண்டம்.

கோவை: கோவையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் ரூ.62.17 கோடியில் உக்கடம் பெரியகுளம், ரூ.31.47 கோடியில் செல்வசிந்தாமணி குளம், ரூ.24.31 கோடியில் வாலாங்குளம் சாலை, ரூ.67.86 கோடியில் வாலாங்குளத்தின் மற்றொரு கரைப்பகுதி, ரூ.31.25 கோடியில் செல்வாம்பதி, குமாரசாமி குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. இக்குளங்களில் முடிக்கப்பட்ட திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் நேற்று திறந்து வைத்தார். மேலும், கோவை ஸ்மார்ட்சிட்டி நகர திட்டத்துக்கான www.coimbatoresmartcity.org என்ற இணையதளப் பக்கத்தையும் தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘மேம்படுத்தப்பட்ட குளங்களுக்குச் செல்ல கட்டணம் எதுவும் கிடையாது. மக்கள் அனுமதிக்கப்படும் நேரம் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x