Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM
பழநி: பழநி கோயில் அறங்காவலர் குழுவினர் பொறுப்பேற்றனர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறங்காவலர் குழுவில், கடந்த பத்து ஆண்டுகளாக யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு நேற்று வெளியாவதற்கு முன்னதாக பழநி கோயில் அலுவலகத்துக்கு வந்த திருப்பூரைச் சேர்ந்த அப்புக்குட்டி என்பவர் அறங்காவலர் குழு உறுப்பினராகப் பதவியேற்றார்.
இவரைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்லமுத்தையா, எஸ்.எஸ்.சேகர், கமலக்கண்ணன், லதா ஆகியோர் கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார்பாடி முன்னிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றனர்.
இவர்களுக்கு அறநிலையத் துறை இணை ஆணையர் பாரதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அறங்காவலர் குழுத் தலைவராக அப்புக்குட்டி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT