Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM
சிவகாசி அருகே வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் இடிபாடுகளை நீக்கிய போது மீண்டும் வெடிவிபத்து ஏற்பட்டது.
சிவகாசி அருகேயுள்ள துரைச் சாமிபுரத்தில் கிருஷ்ணசாமி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் கடந்த 13-ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில், சுரேஷ் என்பவர் காயமடைந்தார்.
இந்நிலையில், பட்டாசு ஆலையில் கட்டிட இடிபாடுகளை ஜேசிபி மூலம் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது அதில் கிடந்த மருந்துகள் மீண்டும் வெடித்துச் சிதறின. இதில் ஜேசிபி ஓட்டுநர் வடபட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவர் பலத்த காயம் அடைந் தார். இவர் சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மாரனேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT