Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி

வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக கோவை சுங்கம் பணிமனையில் நேற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள். படம்:ஜெ.மனோகரன்

திருப்பூர்/ கோவை/ உதகை

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன. இதனால் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பயணிகள் அவதிப்பட்டனர்.

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி, பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வுபெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்றுமுதல் வேலைநிறுத்தம் தொடங்கப் பட்டது. அதே நேரத்தில் அரசு தரப்பில் வழக்கம்போல பேருந்து கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் சரிபாதி பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதிமுக தொழிற்சங்கத்தினர் மற்றும் ஆதரவு சங்கத்தினர், பணியாளர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயங்கின.

தொழில் நகரமான திருப்பூரை பொறுத்தவரை நாள்தோறும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பேருந்துகள் மூலமாகவே மாநகரில் உள்ள பின்னலாடை உற்பத்திநிறுவனங்களுக்கு வந்து செல்கின்றனர்.

குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். அனைத்து பேருந்துகளிலும் கூட்ட நெரிசல்காணப்பட்டது.

இதே நிலை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் நிலவியது. போக்குவரத்துத் தொழிற் சங்கத்தினரின் போராட்ட அறிவிப்பால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக பேருந்து பணிமனைகள் முன் காவல் துறையினர்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, திருப்பூர் மாவட்டத்தில் 60 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவித்த னர்.

தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, “மாவட்டத்தில் 80 சதவீதம் பேருந்துகள் இயங்க வில்லை” என்றனர்.

கோவை

கோவையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தால் குறைவான அளவிலேயே அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பேருந்து நிலையங்களில் பயணிகள் காத்திருந்தனர். இருப்பினும், தனியார் பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டன. பேருந்துகள் இயங்காத இடங்களில் ஆட்டோ, கார் போன்றவற்றில் பொதுமக்கள் பயணித்தனர்.

குறைவான பேருந்துகள் இயக்கப்பட்ட வழித்தடங்களில் செல்லும் பயணிகளும், கிராமங்களில் இருந்து வேலைக்குச் செல்வோரும் அவதி அடைந்தனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் போக்கு வரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 20 சதவீதபேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதிமுக தொழிற்சங்கமான ஏடிபி தொழிற்சங்கத் தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

தனியார் பேருந்துகள் வழக்கம்போல இயங்கின. இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக நீலகிரி மாவட்ட பொதுமேலாளர் ஆறுமுகம் கூறும்போது, "மாவட்டத்தில் உள்ள 254 வழித்தடங்களில், முக்கிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x