Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

பொள்ளாச்சி மாவட்டம் அறிவிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளை இணைத்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி சார்பில், மாவட்டச் செயலர் கே.நித்தியானந்தன் தலைமையில், பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பொள்ளாச்சியை மாவட்டமாக்க வலியுறுத்தி ஏராளமானோர் கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து கொமதேக மாவட்டச் செயலர் கே.நித்தியானந்தன் கூறும்போது, "பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரிகடந்த 50 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. வால்பாறை பகுதி மக்கள் மாவட்ட தலைமையிடமான கோவைக்குச் செல்ல 125 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியுள்ளது. இதேபோல, உடுமலை பகுதி மக்கள் நீண்ட தொலைவு பயணித்து திருப்பூர் மாவட்ட தலைமையிடத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்கப்பட்டால், வால்பாறை, ஆனைமலை. உடுமலை மக்கள் எளிதாக வந்து செல்ல முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x