Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

வீடு புகுந்துதங்க சங்கிலி திருட்டு

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரைச் சேர்ந்தவர் சுமதி(58). இவர் கடந்த 22-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, முனியாண்டிபுரத்தில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றார். வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருப்பது குறித்து பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் சுமதிக்கு தகவல் கொடுத்தார்.

அவர் திரும்பி வந்து பார்த்த போது, பீரோவில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, 120 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.11 ஆயிரம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x