Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

ராமர் கோயில் ரத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு மதுரை காவல் ஆணையர் மார்ச் 1-ல் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

மதுரை

ராமர் கோயில் கட்டுமானப் பணி நிதி வசூல் ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக மதுரை மாநகர் காவல் ஆணை யர் மார்ச் 1-ல் நேரில் ஆஜராக உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மதுரை மாவட்ட ஒருங் கிணைப்பாளர் என்.செல்வகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக இந்துக்களிடம் எங்கள் அறக் கட்டளை சார்பில் நிதி திரட்டப்படுகிறது. மதுரை மாநகராட்சியில் நூறு வார்டுகளில் நிதி வசூலிப்பதற்காக ரத யாத்திரை நடத்த அனுமதி கேட்டோம். போலீஸார் அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தோம். தனி நீதிபதி விசாரித்து நிபந்தனைகளுடன் ரத யாத்திரைக்கு அனு மதி வழங்க உத்தரவிட்டார். அதன் பிறகும் அனுமதி வழங்கவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நட வடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி ஹேமலதா முன்னிலை யில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் னிவாசராகவன் வாதிடுகையில், நீதிமன்றம் உடனடியாக நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது வரை அந்த உத்தரவை காவல்துறை நிறை வேற்றவில்லை. ரத யாத்திரை வாகனத்தை யும் காவல்துறையினர் தங்களது கட்டுப் பாட்டில் வைத்துள்ளனர் என்று கூறினார்.

இதையடுத்து, ரத யாத்திரை வாகனத்தை விடுவிக்கவும், மதுரை மாநகர காவல் ஆணையர் மார்ச் 1-ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x