Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் செயலாளர் உ.உமாதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கு புதிய நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் எழுதும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பயிற்சி உதவித் தொகை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் அதில் அடங்கும்.
புதிய நலத்திட்டங்களில் பயன்பெற தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழிலாளியின் மாத ஊதிய உச்ச வரம்பு அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு `செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை 600 006' என்ற முகவரியிலோ அல்லது 89397-82783 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT