Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

பெட்டிக் கடைக்காரரிடம் போலி நாணயங்கள் தந்து ரூ.3.80 லட்சம் முறைகேடு

மதுரை

மதுரை அருகிலுள்ள எம்.சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி(55). பெட்டிக்கடை நடத்துகிறார். சேலத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் தனது மனைவியுடன் சத்தி ரப்பட்டியில் தங்கி கூலி வேலை பார்த்தார்.

கடந்த பிப்.15-ல் அழகர்சாமியை அணுகிய முனியப்பன், ரூ.2 ஆயிரம் பெற்றுக் கொண்டு 2 தங்க நாணயங்களை கொடுத்தார். இதேபோல் தன்னிடம் 300 தங்க நாணயங்கள் இருப்பதாகவும், அதை குறைந்த விலைக்குத் தருவதாகவும் முனியப்பன் தெரிவித்தார்.

இதை நம்பிய அழகர்சாமி ரூ.3.80 லட்சம் கொடுத்து 300 நாணயங்களைப் பெற்றார். அவை போலி எனத் தெரியவந்தது. புகாரின்பேரில் எம். சத்திரப்பட்டி போலீஸார்முனியப்பன், அவரது மனைவியைத் தேடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x