Published : 25 Feb 2021 03:17 AM
Last Updated : 25 Feb 2021 03:17 AM
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் ஆம்பூரில் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
வருவாய்த் துறை கிராம உதவியாளர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வில் சென்ற கிராம உதவியாளர்களுக்கு ஓய்வூதிய குறைபாடுகளை தீர்க்க வேண்டும். காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூரில் சமீபத்தில் ரத்தத்தில் கையெழுத்திட்டு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.
இந்த போராட்டத்தில் ஆம்பூர் வட்டத் தலைவர் பிச்சாண்டி, கவுரவத்தலைவர் சந்திரசேகர், வட்டப் பொருளாளர் ஜெகன் மற்றும் கிராம உதவியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT