Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

சென்னை மாநகர கூட்டாண்மை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.3,140 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை

சென்னை மாநகரக் கூட்டாண்மை வளர்ச்சித் திட்டத்தின் முதல்கட்டத்துக்கு ரூ.3,140 கோடி இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறப்பட்டிருப்பதாவது: உலக வங்கியுடன் கலந்துரையாடலுக்குப் பின்பு, சென்னை மாநகர கூட்டாண்மை தனித்தன்மைவாய்ந்த வளர்ச்சித் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று அனு பவத்தைக் கொண்டு பொதுசுகாதாரம், போக்குவரத்து, குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் நெகிழ்திறன் வாய்ந்த சேவைகளை வழங்க இத்திட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.

இத்திட்டத்துக்கான ஒப் புதல் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும், உலக வங்கியுடன் கடன் பெறுவதற்கான பேச்சு வார்த்தை நடைபெறஉள்ளது. இத்திட்டத்தின் முதல்கட்டத்தில் நிர்வாகம், கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்வதற்காக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆரம்ப சுகாதார சேவைகளின் வசதிகளையும், தரத்தையும் உயர்த்துதல், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து சேவைகளையும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நீர் வழங்குவதை விரிவு படுத்துதல் மேற்கூறிய நிறு வனங்களின் நிதி நிலையை வலுப்படுத்துதல் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி யின் திடக்கழிவு மேலாண் மையை மேம்படுத்துதல் போன்ற முக்கியமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டம் 3 கட்டங்களாக 7 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் முதல் கட்டம் ரூ.3,140 கோடியில் செயல் படுத்தப்படும். இதில் உலக வங்கியின் நிதி உதவியாக 300 மில்லியன் அமெரிக்க டாலர் அடங்கும். இவ்வாறு இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x