Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM
பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரி, பவானி, அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் சங்கமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குச் சொந்தமான திருத்தேர் பழுதடைந்து இருந்ததால், தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து சங்கமேஸ்வரர் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் உதவியுடன் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய தேர் உருவாக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடந்த நிலையில், தற்போது தேர் வடிவமைக்கும் பணி முழுமையாக முடிந்துள்ளது. இதையடுத்து, புதிய தேர் வெள்ளோட்ட திருவிழா நேற்று நடந்தது. மலர்களால் அலங்கரிப்பட்ட தேருக்கு, மகா தீபாராதனை நடத்திய பின்னர் பஜனை கோயில் வீதி வழியாக தேரோட்டம் நடந்தது.
நிகழ்ச்சியில் சங்கமேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கே.எம்.எஸ்.பழனிசாமி, பவானி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணராஜ், சங்கமேஸ்வரர் கோயில் ஆணையாளர் சபர்மதி மற்றும் கோயில் பணியாளர்கள், சிவனடியார்கள், ஊர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT