Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திமுக-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ பேசினார்.

சேலம்

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுபோல சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சி எம்பி கவுதமசிகாமணி, தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா, சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பு வைத்தும் திமுகவினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

நாமக்கல் மோகனூர் சாலை அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமை வகித்தார்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்திச்செல்வன், மாநில நிர்வாகிகள் ராணி, நக்கீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மேற்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார்.

தருமபுரி நகரில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், எம் எல் ஏ-வுமான தடங்கம் சுப்பிரமணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று புதிய பேருந்து அண்ணா சிலை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நவாப் வரவேற்றார்.

ஓசூர் ராம்நகரில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு எம்எல்ஏ ஓய்.பிரகாஷ் தலைமை தாங்கினார். ஓசூர் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஓசூர் நகராட்சி தலைவர் மாதேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x