Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

ஆளுநரைக் கொண்டு அரசுக்கு களங்கம் கற்பித்தார்கள் - வருமான வரித்துறையை வைத்து மிரட்டுகிறார்கள் ‘நடந்தது என்ன? - புதுவை மக்களுக்கு நன்றாகத் தெரியும்’ ராஜினாமாவுக்கு முன் சட்டப்பேரவையில் மத்திய அரசின் மீது குற்றம்சாட்டி நாராயணசாமி ஆவேசம்

ஆட்சி தொடங்கியது முதல் புதுவை அரசின் திட்டங்களை முடக்கியதாக சட்டப்பேரவையில் ஆவேசமாக குற்றம்சாட்டும் முதல்வர் நாராயணசாமி. படம்.எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

“மத்திய பாஜக அரசு என்னென்னவேலைகளை செய்கிறது என அனைவருக்கும் தெரியும். அனைத்தையும் உன்னிப்பாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்" என சட்டப்பேரவையில் நாராய ணசாமி கடுமையாக விமர்சித்து பேசினார்

புதுச்சேரியில் காங்கிரஸ்- திமுக கூட்டணியில் அடுத்தடுத்து 6 எம்எல்ஏக்கள் பதவி விலகி யதால், ஆளும் அரசுக்கு கடும்நெருக்கடி ஏற்பட்டு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல்ஏற்பட்டது.

இதற்காக நேற்று சட்டப் பேரவை கூடியது. கூட்டத்திற்குப்பின், ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து நாராயணசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார்.

முன்னதாக சட்டப்பேரவையில் நேற்று காலை நம்பிக்கை கோரும் பிரேரணையை (Confidence Motion) முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்து பேசினார். அவரது பேச்சின் விவரம்:

கடந்த 2016 தேர்தலில் வென்று காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சிபதவியேற்றது. அதன்பின் நடந்த3 இடைத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். ஒவ்வொருஇடைத்தேர்தலிலும் 60 சதவீதத்துக்கும் அதிக வாக்குகளை பெற்றுள்ளோம். புதுவை மக்களின் நம்பிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம்.

எதிர் தரப்பு எடுத்த அஸ்திரம்

மத்திய அரசிடம் இருந்து புதுவைக்கு கிடைக்க வேண்டிய, உரிய நிதி கிடைக்கவில்லை. மத்தியஅரசு நெருக்கடி, கிரண்பேடியால் ஆட்சிக்கு அன்றாடத் தொல்லை,எதிர்க் கட்சிகளின் ஆட்சி கவிழ்ப்பு நிலை என பிரச்சினைகள் தொடர்ந்தன. இவை அனைத்தையும் மக்கள்பார்த்தனர். ஆனாலும், 5 ஆண்டு காங் கிரஸ், திமுக கூட்டணி சிறப்பாக ஆட்சி நடத்தியுள்ளது. பல ஆண்டுகளாக எதிர்க் கட்சிகள் ஆட்சி கவிழ்ப்பு வேலை செய்தும் வெற்றிபெற முடியவில்லை. தற்போது புது அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளனர். கடந்த ஆட்சியில் விட்டுச்சென்ற, நிறை வேற்றாத திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி யுள்ளோம்.

அரசு ஊழியர்கள் சம்பளம்கரோனா காலத்தில் கேள்விக்குறியானது. ஆனால் சம்பளத்தை நாங்கள் குறைக்கவில்லை. கல்வீடுகட்டும் திட்ட நிதியை உயர்த்தி யுள்ளோம்.

கரோனா காலத்தில் அமைச் சர்கள், எம்எல்ஏக்கள் உயிரை பணயம் வைத்து பணி செய்தனர். மத்திய அரசு ரூ.5 கோடி மட்டுமேகரோனா கால நிதியாக வழங்கியது. புதுவை மாநில நிதியில் இருந்து நிவாரண பணிகளை வழங்கினோம். 14 லட்சத்தில் 6 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இறப்பு விகிதம் மற்றும் நோயில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் இந்தியாவிலேயே புதுவையில் தான் அதிகம். அப்போது யார்? யார்? எங்கே இருந்தார்கள் என்பதை புதுவை மக்களுக்குத் தெரியும்.

களங்கம் ஏற்படுத்த நினைத்தனர்

பொங்கலுக்கு நிதி வழங்க எடுத்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது. புதுவையின் வளர்ச்சி 10.2 சதவீதம்மாக உள்ளது. பிரதமர் மோடி அரசு மைனஸ் 7 சதவீத வளர்ச்சியில் உள்ளது. பட்ஜெட் நிதியில் 95 சதவீத நிதியை செலவிட்டுள்ளோம்.

`ஆட்சியாளர்கள் ஒன்றும் செய்யவில்லை' என குறை கூறுகின்றனர். விவசாயிகள், அரசு ஊழியர்கள், வியாபாரிகளுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள் ளோம். முதல்வர், அமைச்சர், எம்எல்ஏ அதிகாரத்தை மத்திய மோடி அரசும், ஆளுநரும் குறைத்து காங்கிரஸ் அரசு மீது களங்கம் ஏற்படுத்த, கொச்சைப்படுத்த நினைத்தனர்.

மக்களால் புறக்கணிக்கப் பட்டவர்கள் ஒருங்கிணைந்து ஆட் சியை கவிழ்க்க முயற்சி செய்தனர். காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் உறுதியாக இருந்ததால் 5 ஆண்டு சிறப்பான ஆட்சியை நடத்த முடிந்தது.

‘புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைத்தால் 90 சதவீதம் மானியம் கிடைக்கும். மாநில அரசு என்றால் 41 சதவீத மானியம் கிடைக்கும்’ இதைக்கூறிய என்னை விமர்சித்தனர். மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆட்சி செய்யவேண்டும். மத்தியில் நியமிக்கப்படுபவர்களால் மக்கள் ஆட்சிக்கு களங்கம் ஏற்படக்கூடாது என மாநில அந்தஸ்து கேட்டோம். புதுவைக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. 15வது நிதி ஆணையத்தில் புதுவையை சேர்க்க கோரிக்கை வைத்தோம். ஆனால் சேர்க்கவில்லை. புதுவை அரசை மத்திய பா.ஜனதா அரசு வஞ்சிக்கிறது என்பது மக்களுக்கு தெரியும்.

புதுவை மக்களுக்கு அரிசி வழங்க முடிவெடுத்தோம். ஆனால்,நேரடியாக பணம் வழங்க உத்தரவிட்டனர். பல மாநிலங்களில் அரிசிவழங்கப்படுகிறது. ஆனால் புதுவையில் மட்டும் ஏன்அரிசி வழங்கக்கூடாது? மக்கள் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தரவில்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பில் புதுவை அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொண்டது. இழப்பீடு தொகை ரூ.800 கோடியை புதுவைக்கு தரவில்லை.

மதிய உணவு திட்டத்துக்கு அரிசி வழங்க ஒதுக்கப்பட்ட நிதியும் தடுத்து நிறுத்தப்பட்டது.

அரசுக்கும், ஆளுநருக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டால் மத்திய அரசுக்கு கோப்பை அனுப்பி வைக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. இதனை வைத்து அனைத்து கோப்பையும் மத்திய அரசுக்கு அனுப்பிகிரண்பேடி காலதாமதப்படுத் தினார். இதனை எதிர்க் கட்சிகள் தட்டிக்கேட்டார்களா?

ஆளுநரால் அரசுக்கு களங்கம்

‘நிவர்’, ‘புரவி’ புயல் வந்தது. அனைத்து கடற்கரையோர பகுதியையும் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து, நடவடிக்கை எடுத்தேன். எதிர்க் கட்சிகள் யாரையும் காணவில்லை. ஆனால் நான் சென்று பார்க்கவில்லை எனவதந்தி பரப்புகின்றனர். பாஜகவினர்பொய்யர்கள்.

பெட்ரோல், டீசல் விலையைரூ.100 ஆக உயர்த்தியுள்ளனர். சிலிண்டர் விலை ரூ.ஆயிரமாக உயரும். இதுதான் மத்திய பாஜக அரசின் சாதனை. இந்த சாதனையால் பாமர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியில் ஆட்சியில் இருப்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாமா?

மத்திய அரசை எதிர்த்தால் வருமானவரி, சிபிஐ, அமலாக்க துறையை வைத்து மிரட்டுகிறது. புதுவை மில்கள், கூட்டுறவு நிறுவனங்களை மூடி விட்டனர். ரேஷன்கடைகளை மூடி விட்டனர். ரேஷன்கடை ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம், ரோடியர் மில் ஊழியர்களுக்கு ரூ.24 கோடி நிதி ஒதுக்கினோம். இந்த நிதியை இஎஸ்ஐக்கு அனுப்பு என கிரண்பேடி உத்தரவிட்டார். அரசுக்குகளங்கம் விளைவிக்கவே கிரண்பேடி அனைத்தையும் தடுத்து நிறுத்தினார். பாஜக வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்கின்றனர். செம்மண் ஆறுதான் ஓடும். இன்ஸ்யூரன்ஸ், பிஎஸ்என்எல், வங்கிகள்என அனைத்தையும் தனியார்மய மாக்குகின்றனர். நாட்டையே அடமானம் வைக்க உள்ளனர். புதுவை மக்களையும் வஞ்சிக்கின்றனர். அரசு காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தோம். அதனையும் தடுத்து நிறுத்தினர்.

மக்கள் மன்றத்தில் சந்திப்போம்

என்னுடன் 2வது அமைச்சராக இருந்தவர் (நமச்சிவாயம்) கட்சி மாறிவிட்டார். அவரை மாநில தலைவராக சோனியா நியமித்தார். திருக்காஞ்சி பாலத்தை ஒன்றாக நின்று திறக்கிறோம், மறுநாள் மாற்று கட்சிக்கு போகிறார். 3வது அமைச்சராக இருந்தவர் (மல்லாடி கிருஷ்ணாராவ்) ஏனாமில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர். அவர் பிராந்தியத்துக்கு ஜிப்மர்கிளை, ஆயுஷ்மான் நிறுவனம் என பல திட்டங்களை நிறைவேற்றினோம். நிதியும் அதிகமாக பெற்றுச்சென்றார். தற்போது அவரும் மாறியுள்ளார். எனக்கு தொகுதியை விட்டுக்கொடுத்த எம்எல்ஏவும் (ஜான்குமார்) ராஜினாமா செய்துள்ளார். மற்றொரு எம்எல்ஏ தாழ்த்தப்பட்டவர். அவரைப்பற்றி எதுவுமில்லை. பாரம்பரிய காங்கிரஸாரும், திமுகவினரும் ராஜினாமா செய்துள்ளனர்.

பாஜக என்னென்ன வேலைகளை செய்கிறது என அனைவருக்கும் தெரியும். அனைத்தையும் உன்னிப்பாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 5 ஆண்டுகள் ஆட்சியை பூர்த்தி செய் துள்ளோம். அடுத்து மக்கள் மன்றத்தில் சந்திப்போம். புதுவை மக்கள் எங்களை ஆதரிப்பார்கள். யார் பாடுபட்டார்கள், யார் எதிரி என மக்களுக்கு தெரியும். வாய் மையே வெல்லும், உண்மைதான் வெல்லும். இன்று எங்களுக்கு வரலாம், நாளை எதிர்கட்சிகளான உங்களுக்கும் வரலாம். பதவி என்பது வந்து போகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x