ரூ.1.39 கோடியில் 604 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

ரூ.1.39 கோடியில் 604 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

Published on

கரூரில் 604 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சு.மலர் விழி தலைமையில் அண்மை யில் நடைபெற்றது.

மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் 604 பேருக்கு ரூ.1.39 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கி பேசியது:

மாவட்டத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசுப் புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி குடியிருந்து வந்த 604 பேருக்கு ரூ.1.39 கோடி மதிப்பில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

விழாவில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம.கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந் திரன், கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in