Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
உலக தாய்மொழி நாளையொட்டி, திருச்சி தமிழ்ச் சங்க கட்டிடத் தில் உள்ள தமிழ்த் தாய் மற்றும் திருவள்ளுவர் ஆகிய சிலை களுக்கு நேற்று எழுதமிழ் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இயக்கத் தலைவர் மு.குமார சாமி தலைமையில் இணைச் செயலாளர் த.முருகானந்தம், தமிழ்ச் சங்க நிர்வாக அலுவலர் பெ.உதயகுமார், முன்னாள் மேயர் சாருபாலா ஆர்.தொண்டைமான், பேராசிரியர்கள் ஜி.ரவீந்திரன், க.நெடுஞ்செழியன், சா.பெஞ்சமின் இளங்கோ உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர்.
உலக தாய்மொழி நாளை யொட்டி, தமிழகப் பெண்கள் செயற் களம், தமிழரண் மாணவர்கள் ஆகியவை இணைந்து தூய வளனார் கல்லூரியில் நேற்று நடத்திய நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றி வரும் தமிழறிஞர்கள், பள்ளி- கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, தமிழகப் பெண்கள் செயற்களம் நிர்வாகி பூங்குழலி மற்றும் விதைகள் அறக்கட்டளை நிறுவனர் மயிலை ப.வேலுமணி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழரண் மாணவர்கள் அமைப்பின் திருச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, இளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழறிஞர்கள் 2 பேர், பள்ளி ஆசிரியர்கள் 8 பேர், கல்லூரி ஆசிரியர்கள் 4 பேர் என மொத் தம் 14 பேருக்கு தமிழ்க் குரிசில் விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், வாகனப் பதிவெண்களை தமிழ்மொழியில் எழுதுவது, குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயரிடுவது, கையெ ழுத்தை தமிழில் இடுவது, திருமணத்தை தமிழ்முறைப்படி நடத்துவது, தமிழ்வழிக் கல்வியை ஆதரிப்பது என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் தமிழறி ஞர்களின் படம் பொறித்த 200 ஹீலியம் பலூன்கள் பறக்கவிடப் பட்டன. முன்னதாக, தமிழரண் மாணவர்கள் அமைப்பின் திருச்சி பொறுப்பாளர் அய்யப்பன் வரவேற்றார். திருச்சி ஒருங்கி ணைப்பாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT