Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM

தாந்தோணிமலை கோயிலில் பிப்.27-ல் மாசி மக தேரோட்டம்

� கரூர்

கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் மாசி மக தேரோட்டம் பிப்.27-ம் தேதி நடைபெற உள்ளது.

கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் மாசி மக திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா பிப்.17-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, கொடியேற்றம் நேற்று முன்தினம் நடைபெற்றது. பிப்.25-ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம், 27-ம் தேதி காலை 5.45 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்று இரவு வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 1-ம் தேதி மாலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x