Published : 20 Feb 2021 03:18 AM
Last Updated : 20 Feb 2021 03:18 AM

பத்திரப் பதிவில் முறைகேடு செய்ய முயற்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் சிக்கிய 5 பேரிடம் விசாரணை

திருச்சி

திருச்சி சாத்தனூரில் செயல்படும் சார் பதிவாளர் அலுவலகத்தில், மணிகண்டம் அருகேயுள்ள சேதுராப்பட்டியிலுள்ள 1.68 ஏக்கர் நிலத்தை பத்திரப் பதிவு செய்ய சிலர் வந்திருந்தனர். அப்போது அவர்கள் அளித்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அவற்றில் சில போலியானதாக இருந்ததாகவும், முறைகேடாக பத்திரப் பதிவு செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து பத்திரப் பதிவுக்காக வந்திருந்த அரியமங்கலம் நேருஜி நகரைச் சேர்ந்த லட்சுமி (54), பாஸ்கர்(50), சிவகங்கை மாவட்டம் சீனமங்கலத்தைச் சேர்ந்த ராஜசேகர் (34), மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள மேலசீதேவிமங்கலத்தைச் சேர்ந்த பார்த்திபன்(34), பஞ்சப்பூரைச் சேர்ந்த ஆறுமுகம் (39) ஆகியோரைப் பிடித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இவர்களை அழைத்து வந்த பஞ்சப்பூரைச் சேர்ந்த பெரியசாமி (35) என்பவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

பிடிபட்டவர்களிடம் கே.கே.நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x