Published : 19 Feb 2021 03:25 AM
Last Updated : 19 Feb 2021 03:25 AM
வேலூர் மற்றும் இறைவன்காடு துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர், இறைவன்காடு துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் நாளை (20-ம் தேதி) மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புதிய பேருந்து நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், வேலூர் டவுன், பஜார், சலவன்பேட்டை, அண்ணா சாலை, கஸ்பா, ஊசூர், கொணவட்டம், சேண்பாக்கம், வல்லண்டராம், விரிஞ்சிபுரம், செதுவாலை, கந்தநேரி, மருதவல்லிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம் வாணியம்பாடி மின் கோட்டத்துக்கு உட்பட்ட கேத்தாண்டப்பட்டி, வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, திம்மாம்பேட்டை, ஆலங்காயம், மிட்டூர், விண்ணமங்கலம் ஆகிய 7 துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (20-ம் தேதி) சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி, வாணியம்பாடி, திகுவாபாளையம்,நெக்குந்தி, கலந்தரா, பொன்னேரி, ஏலகிரிமலை, வள்ளிப்பட்டு, கொத்தக்கோட்டை, பெருமாள்பேட்டை, வளையாம்பட்டு, கேத்தாண்டப்பட்டி, ராம நாயக்கன்பேட்டை, இடையம்பட்டி, அம்பலூர், திம்மாம்பேட்டை, பள்ளத்தூர், நாராயணபுரம், தும்பேரி, ஆலங்காயம், நிம்மியம்பட்டு, பூங்குளம், காவலூர், வெள்ளக்குட்டை, மிட்டூர், ஆண்டியப்பனூர், மரிமானிக்குப்பம், சின்னப்பள்ளிக்குப்பம், சம்மந்திகுப்பம், பாப்பனாப்பள்ளி, வடச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என வாணியம்பாடி மின்கோட்ட அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT