Published : 17 Feb 2021 03:13 AM
Last Updated : 17 Feb 2021 03:13 AM
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினர் செயலர் கடலூர் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார்.
14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்று சிறைகளில் உள்ள கைதிகளின் வழக்கு குறித்து ஆய்வுமேற்கொள்ள தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினர் செயலரும் மாவட்ட நீதிபதியுமான ராஜசேகர் நேற்று கடலூர் மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விசாரணை மற்றும் தண்டனை கைதிகளிடம் அவர்களின் நிலைமையை கேட்டறிந்தார். அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை செய்வதாகவும் கூறினார்.
கடலூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி செம்மல், கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான ஜோதி, விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான சங்கர், பட்டியல் வழக்கறிஞர் கருணாகரன், கடலூர் மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து கடலூர்அரசு தலைமை மருத்துவமனை யில் இயங்கி வரும் ஏஆர்டி மையம், கடலூர் மகளிர் கிளைச்சிறை, விருத்தாசலம் மற்றும் சிதம்பரம் கிளை சிறைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT