Published : 17 Feb 2021 03:13 AM
Last Updated : 17 Feb 2021 03:13 AM

தமிழகத்திலுள்ள சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி இன்றும், நாளையும் நடைபெறுகிறது

அரியலூர் மாவட்டம், கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடவுள்ள ஆர்வலர்களுக்கு பயிற்சியளிக்கிறார் பிசிஎப் விஞ்ஞானி ஏ.குமரகுரு.

திருச்சி

தமிழக அரசின் வனத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் மற்றும் நீர்நிலைகளில் ஒருங்கி ணைந்த பறவைகள் கணக் கெடுப் புப்பணி இன்றும், நாளையும்(பிப்.17,18) நடைபெறுகிறது.

வனத்துறை சார்பில் ஆண்டு தோறும் பறவைகள் கணக்கெடுப் புப் பணி நடைபெறும். இதன் மூலம் உள்நாட்டுப் பறவைகள், வலசை வரும் பறவைகள், பறவை இனங்களின் எண்ணிக்கை விவரம், எண்ணிக்கை குறைந்தால் அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக இந்த கணக்கெடுப்புப் பணி நடத்தப்படுகிறது.

திருச்சி மண்டல வனப்பாது காவலர் (பொறுப்பு) ராமசுப்பிர மணியன் அறிவுறுத்தலின் பேரில், இந்த மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வனத்துறையுடன் இணைந்து பயோ டைவர்சிட்டி கன்சர்வேஷன் பவுண்டேஷன் அமைப்பு (பிசிஎப் –இந்தியா) இன்றும், நாளையும் (பிப்.17,18) இந்த கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்கிறது.

பறவைகளை கணக்கெடுக்கும் முறை, அவற்றை பதிவு செய்தல், புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட கணக்கெடுப்புக்கான வழிமுறைகள் குறித்து கணக் கெடுப்புப் பணியில் ஈடுபடும் பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் வனத் துறையினருக்கு நேற்று அந்தந்த மாவட்ட வன அலுவலர் கள் பயிற்சியளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x