Published : 17 Feb 2021 03:13 AM
Last Updated : 17 Feb 2021 03:13 AM
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. ரூ. 17.71 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.
இக்கோயிலில் கடந்த 19.3.2020-ம் தேதி 21 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும்பணி மேற்கொள்ளப்பட்டது. 11 மாதங்களுக்குப்பின் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. நாகர்கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் து.ரத்தினவேல் பாண்டியன், ஆய்வர்கள் கண்ணன், முருகானந்தம் ஆகி யோர் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.
ரூ. 17,71,256 ரொக்கமும், 174.34 கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்களும், 256.68 கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும், 1 வெளிநாட்டு பணத்தாளும் கிடைத்தன. திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடு களை திருக்கோயில் செயல் அலுவலர் ராமராஜா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT