Published : 16 Feb 2021 03:13 AM
Last Updated : 16 Feb 2021 03:13 AM

சிறுகனூர் அருகே சாலை பணியாளர் கொலை மனைவி உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை

திருச்சி

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகேயுள்ள இரூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து(40). நெடுஞ்சாலைத் துறையில் சாலை பணியாளராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று முன்தினம் சிறுகனூர் அருகே சி.ஆர்.பாளையத்திலுள்ள தனது சகோதரி செல்வ மணியின் பேத்தி பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார்.

பின்னர் மீண்டும் வீட்டுக்குப் புறப்பட்ட முத்து, அங்குள்ள ஒரு காட்டுக்குள் உடலில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவ்வழி யாகச் சென்றவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்து இறந்தார்.

இதுகுறித்து சிறுகனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் மனைவி சித்ராவின்(28) தகாத உறவைத் தட்டிக் கேட்டதால் இக்கொலை நடைபெற்றதாக தெரியவந்தது. இதையடுத்து முத்துவின் மனைவி சித்ரா, அவருடன் தொடர்பில் இருந்த சி.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த சிலம்பரசன்(28), இவரது நண்பர்களான லால்குடி அருகேயுள்ள சிறுமருதூரைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டன்(28), பல்லவபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த பழனிசாமி மகன் முருகானந்தம் (35), வடக்குத் தெருவைச் சேர்ந்த ரெங்கராஜ் மகன் கார்த்திக்ராஜா (19) ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x