Published : 15 Feb 2021 03:12 AM
Last Updated : 15 Feb 2021 03:12 AM
இந்திய குடிமைப் பணி பயிற்சிதேர்வுக்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ பட்ட தாரிகள் வரும் 19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலை யம் சார்பில் ஆண்டுதோறும் 20 மீனவ பட்டதாரி இளை ஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள பிரத்யேக பயிற்சி அளித்திட அரசு ஆணையிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சிபெற விரும்புவோர் விண்ணப்பபடிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறை யின் இணையதளத்தில் "www.fisheries.tn.gov.in" பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும்விண்ணப்ப படிவங்களை மண் டல மீன்துறை துணை/ இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
வரும் 19-ம் தேதிக்குள்பூர்த்தி செய்த விண்ணப்பங் களை சம்பந்தப்பட்ட மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாவோ அல்லது நேரடியா கவோ வழங்கலாம். மேலும் விவரங்களுக்கு மீன்வள உதவி இயக்குநர், 10, நித்தியானந் தம்நகர், வழுதரெட்டி, விழுப்புரம் - 605401 என்ற முகவரியிலும், 04146- 259329 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என விழுப்புரம்ஆட்சியர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT