Published : 14 Feb 2021 03:19 AM
Last Updated : 14 Feb 2021 03:19 AM
வேப்பனப்பள்ளி அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி காவல் ஆய்வாளர் ரஜினி மற்றும் போலீஸார், வேப்பனப்பள்ளி - பேரிகை சாலையில் கீரனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸாரை பார்த்த லாரி ஓட்டுநர், வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். சந்தேகமடைந்த போலீஸார் லாரியை சோதனை செய்தனர். அந்த லாரியில் எட்டிப்பள்ளி ஏரியில் இருந்து அனுமதியில்லாமல் 3 யூனிட் மணல் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை மணலுடன் பறிமுதல் செய்த போலீஸார், லாரியின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT