Published : 14 Feb 2021 03:20 AM
Last Updated : 14 Feb 2021 03:20 AM

புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று

வேலூர்

வேலூர், ராணிப்பேட்டை மற்றும் தி.மலை மாவட்டங்களில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,851- ஆகவும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,668- ஆகவும் அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கரோனா பாதிப்பில்லை என்ற நிலையில், மொத்த பாதிப்பு எண் ணிக்கை 7,606-ஆக உள்ளது.

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றக்கு மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 19,421-ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x