Published : 13 Feb 2021 03:11 AM
Last Updated : 13 Feb 2021 03:11 AM
புரம் பொற்கோயிலில் வரும் மார்ச் 10-ம் தேதி நடைபெறவுள்ள மகாலட்சுமி யாகத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற் கவுள்ளார்.
இதுகுறித்து நாராயணி பீடம் மேலாளர் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் அடுத்த புரம் பொற்கோயிலில் வரும் மார்ச் 10-ம் தேதி சக்தி அம்மா தலைமையில் மகாலட்சுமி யாகம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு யாகம் தொடங்கி, முற்பகல் 12 மணிக்கு பூர்ணாஹூதியுடன் நிறைவு பெறுகிறது.
இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்’’ என தெரி வித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT