Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM

விழுப்புரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை மூடக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் உள்ள தனியார் தண்ணீர் நிறுவனத்தை மூடக்கோரி ஆட்சியர் அலுவலகம் எதிரே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்

விழுப்புரத்தில் தனியார் தண்ணீர் நிறுவனத்தை மூடக்கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் 10 ஆண்டுகளாக தனியார் தண்ணீர் நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தால்அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ் சப்படுவதால் இப்பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரம் வீடுகளுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனத்தை நிரந்தரமாக மூடக்கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கோவிந்தசாமி நகரில்கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை. இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

தண்ணீர் நிறுவனத்தை மூடக்கோரியும் கமலா கண் ணப்பன் நகர், காமதேனுநகர், குழந்தைவேல் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x