Published : 11 Feb 2021 03:14 AM
Last Updated : 11 Feb 2021 03:14 AM
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூரில் நேற்று மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அரியலூர் பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர், மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் சேகர் உள்ளிட்டோர் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதேபோல, வி.கைகாட்டி, திருமானூர், தா.பழூரிலும் விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT