Published : 10 Feb 2021 03:15 AM
Last Updated : 10 Feb 2021 03:15 AM

மாற்றுத்திறனாளிகள் போராட்டம், கைது

திருநெல்வேலி/தென்காசி/தூத்துக்குடி/நாகர்கோவில்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் குடியேற முயன்ற 62 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது. `தெலங்கானா, புதுச்சேரியைப் போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவி தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம் 2016-ன்படி தனியார் துறை களிலும் 5 சதவீதம் பணிகளை உத்தரவாதப்படுத்த வேண்டும்’ ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் உபதலைவர் பி.தியாகராஜன் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 21 பெண்கள் உட்பட 62 மாற்றுத்திறனாளிகளை போலீஸார் கைது செய்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இசக்கி தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். இதுபோல், ஆலங்குளம் மற்றும் சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடந்தது. மாற்றுத்திறனா ளிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் சர்க்கரையப்பன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் கண்ணன், ஒன்றியச் செயலாளர் முத்துமாலை, நகரத் தலைவர் அந்தோணிராஜ், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன் பங்கேற்றனர்.

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் புவிராஜ் தலைமையிலும், கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழு உறுப்பினர் கருப்பசாமி தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்தது.

நாகர்கோவில்

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் திரண்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அங்குள்ள அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் குடியேறும் போராட்டம் நடத்தஅவர்கள் முயன்றனர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x