Published : 10 Feb 2021 03:16 AM
Last Updated : 10 Feb 2021 03:16 AM
திருநெல்வேலி- காந்திதாம் ஹம்சபர் முழு குளிர்சாதன விரைவு ரயிலை, சாதாரண விரைவு ரயிலாக மாற்ற வேண்டும் என்று, மத்திய ரயில்வே அமைச்சருக்கு, திருநெல்வேலி எம்பி ஞானதிரவியம் மனு அனுப்பியுள்ளார்.
மனு விவரம்:
திருநெல்வேலி,- காந்திதாம் ஹம்சபர் ரயில் தற்போது முழுவதுமாக குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயக்கப்படுகிறது. இந்த ரயில் முழுவதுமாக குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயக்கப்படுவதால், அதற்கான அதிக கட்டணத்தை செலுத்தி, சாதாரண பயணிகள் பயணிக்க இயலாமல் உள்ளனர். எனவே, இந்த ரயிலை 2-ம் வகுப்பு படுக்கை வசதியுடன் கூடிய விரைவு ரயிலாக மாற்றி இயக்கினால் மும்பை செல்லும் அனைவரும் இந்த ரயிலை பயன்படுத்துவர் என்று, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT