Published : 09 Feb 2021 03:14 AM
Last Updated : 09 Feb 2021 03:14 AM
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கி ணைப்பாளர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
ஜாக்டோ- ஜியோ போராட் டத்தில் ஈடுபட்டதற்காக பணியிட மாறுதல் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய இடங்களிலேயே மீண்டும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திர சேகர், சகாதேவன் ஆகியோர் தலைமை வகித்தனர். அமைப்பின் நிர்வாகிகள் ராஜேந்திரன், நீதி நாயகம், ஆரோக்கியராஜ், ரேணுகாதேவி, தியாகராஜன், உதுமான் அலி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர்.
ஜாக்டோ- ஜியோ சார்பில் ஒருங் கிணைப்பாளர் மு.சுப்பிரமணியன் தலைமையில் கரூர் ஆர்.எம்.எஸ் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகி கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் அண்ணா சிலை அருகே ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப் பாட்டத்துக்கு, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT