விழுப்புரத்தில் நடைபெற்ற சமுதாய நூலகத் திறப்பு விழா.
விழுப்புரத்தில் நடைபெற்ற சமுதாய நூலகத் திறப்பு விழா.

விழுப்புரத்தில் சமுதாய நூலகம் திறப்பு

Published on

விழுப்புரம் அருகே தந்தை பெரியார் நகரில் தமிழ்நாடு நூல கத் துறை சார்பில் பொதுமக்கள் பங்களிப்புடன் சமுதாய நூலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட மைய நூலக நூலகர் ம.இளஞ்செழியன் வரவேற்றார்.மாவட்ட நூலக அலுவலர் ரா.சுப்பிரமணியன் நூலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். திரைப்பட உதவி இயக்குநர் கமலேஷ்ராம், அஞ்சல் துறை அலுவலர் க.மகேஸ்வரன், விரிவுரையாளர் குண.பாரி, அரசு போக்குவரத்து கழக உதவி பொறியாளர் ச. கார்த்திக் ஆகியோர் நூலகத்தின் சிறப்புகள் குறித்து பேசினர். காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ், நூலகர் வேல்முருகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தந்தை பெரியார் நகர் குடியிருப்புவாசிகள் பலர் கலந்து கொண்டனர். ம. சபாபதி நன்றி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in