Published : 07 Feb 2021 03:15 AM
Last Updated : 07 Feb 2021 03:15 AM
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சி பிரஸ் கிளப்பில் நேற்று நடந்தது. இதில் பங் கேற்ற அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பாரி அளித்த பேட்டி:
மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் குடிநீர் இணைப்பு திட்டம், 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் விரைந்து முடிக்க நெருக்கடி அளிப் பதை கைவிட வேண்டும். மேலும், மற்ற துறைகள் மேற்கொள்ள வேண் டிய பண்ணைக்குட்டைகள், வரப்புகள் அமைத்தல், மரக்கன்று கள் வளர்த்தல், சமூக காடுகள் வளர்த்தல், பராமரிப்பு, தோப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளையும் ஊரக வளர்ச்சித் துறையினர் மீது திணிக்கின்றனர். இதனால், ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து நிலை ஊழியர்களும் பணிச் சுமையில், மன அழுத்தத்துடன் பணி யாற்றி வருகின்றனர். இதுபோன்ற திட்டங்களுக்கு புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்ட 801 கணினி உதவியாளர்களை அரசா ணைப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.12-ம் தேதி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அலுவலகம் உள்ள சென்னை பனகல் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில், மாநிலம் முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தொடர்ந்து பிப்.24, 25-ம் தேதிகளில் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். எனவே, பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றார்.
பேட்டியின் போது, மாநில துணைத் தலைவர் பழனியப்பன், மாநில செயலாளர்கள், ஜெய்சங்கர், செல்வகுமார், மாநில தணிக்கை யாளர்கள் ஜம்ருத்னிஷா, காந்திமதி நாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT