Published : 07 Feb 2021 03:15 AM
Last Updated : 07 Feb 2021 03:15 AM
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக புது டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக புது டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை தொடர்ந்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய சாலை மறியல் நேற்று நடைபெற்றது.
அதன்படி, வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே நேற்று சாலை மறியல் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆம்பூர் பைபாஸ் சாலையில் நேற்று மறியல் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பிரபு தலைமையில் மாநில பொதுச் செய லாளர் வெங்கடேசன், ஆம்பூர் நகரத் தலைவர் சரவணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிப்காட்டில் மாவட்டத் தலைவர் பஞ்சாட்சரம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாநில பொதுக்குழு உறுப் பினர் விநாயகம், வாலாஜா மேற்கு ஒன்றிய தலைவர் ஜானகிராமன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT