Published : 06 Feb 2021 03:18 AM
Last Updated : 06 Feb 2021 03:18 AM
ஈரோடு மற்றும் கோபி அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மற்றும் கோபி டி.ஜி.புதூரில் அரசு ஐடிஐ-க்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. நேரடி மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நேரடி சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் 10-ம் வகுப்பு அல்லது 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், அசல் மாற்றுச்சான்றிதழ், அசல் சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
பயிற்சியில் சேரும் மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா பயிற்சியுடன், தமிழக அரசால் மாதம் ரூ.750 உதவித் தொகை, விலையில்லா பாடப்புத்தகங்கள், மடிக்கணினி, மிதிவண்டி, வரைபடக் கருவிகள், தையற்கூலியுடன் இரண்டு செட் சீருடை, காலணி மற்றும் கட்டணமில்லா பேருந்து பாஸ் சலுகைகள் வழங்கப்படும்.
மேலும், தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்சிப்பயிற்சி மற்றும் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சிமுடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். மாணவர் சேர்க்கை மற்றும் பாடப்பிரிவுகள் தொடர்பான விவரங்களுக்கு கோபி ஐடிஐ முதல்வரை 04285-233234, 9443821582 என்ற எண்களிலும், ஈரோடு ஐடிஐ முதல்வரை 0424-2275244, 9443257677 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என ஐடிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT