Published : 06 Feb 2021 03:18 AM
Last Updated : 06 Feb 2021 03:18 AM

சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு திருச்சியிலிருந்து 4 யானைகள் நாளை அனுப்பி வைப்பு

திருச்சி

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெறும் சிறப்பு நலவாழ்வு முகாமுக்கு திருச்சியிலிருந்து 4 யானைகள் நாளை (பிப்.7) காலை 6 மணிக்கு திருப்பராய்த்துறையிலிருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளன.

கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமான யானைகளுக்கு புத்துணர்வு அளிக்க சிறப்பு நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் தேக்கம்பட்டி வனபத்திரகாளி அம்மன் கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப்படுகையில் பிப்.8-ம் தேதி முதல் 48 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த முகாமுக்கு இந்துசமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள ரங்கம் ரங்கநாதர் கோயில் யானைகள் ஆண்டாள், பிரேமி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் யானை லட்சுமி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் யானை அகிலா ஆகிய 4 யானைகள், திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயிலிலிருந்து நாளை (பிப்.7) காலை 6 மணிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இந்த யானைகளுடன் கால் நடை மருத்துவக் குழுவினரும் செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x