Published : 06 Feb 2021 03:18 AM
Last Updated : 06 Feb 2021 03:18 AM

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் திறப்பு

திருநெல்வேலி

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 1,818 கனஅடி தண்ணீர் நேற்று காலை திறந்துவிடப்பட்டது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 136.70 அடியாக இருந்தது. அணைக்கு 424 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 1,373 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 114.90 அடியாக இருந்தது. அணைக்கு 83 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 445 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மொத்தமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 1,818 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

மற்ற அணைகளின் நீர் இருப்பு (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்): சேர்வலாறு- 136.84 அடி (156 அடி), வடக்கு பச்சையாறு- 48.88 அடி (50 அடி), நம்பியாறு- 19.22 அடி (22.96 அடி), கொடுமுடியாறு- 25.25 அடி (52.50 அடி).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x