Published : 04 Feb 2021 03:14 AM
Last Updated : 04 Feb 2021 03:14 AM
திண்டிவனம் வனத்துறை சார்பில் ஊசுட்டேரியில் உலக ஈரநில நாள் கொண்டாடப்பட்டது.
ஆறுகள், கழிமுகங்கள், பவளத்திட்டுகள், தாழ்வான நிலங்கள்,குளம், குட்டைகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், ஈரமான புல்வெளிகள், சதுப்பு நிலக்காடுகள் உள்ளிட்ட ஈர நிலங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2-ம் தேதி உலக ஈர நில நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திண்டிவனம் சரகம் ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் வனத்துறை மற்றும் உலக சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு ஓவிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியது:
விழுப்புரம் மற்றும் புது வைக்கு இடைப்பட்ட இடத்தில் அமைந்திருக்கும் ஊசுட்டேரியில் தற்போது பல்வேறு வகையான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் வந்து தங்கி செல்கின்றன.
இயற்கை சுற்றுச் சூழலை பாதுகாப்பது நமது கடமையாகும். நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டக்கூடாது. பறவைகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட இயற்கையை அழிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இயற்கையை பாதுகாத்து சமுதாயத்தை வளர்ச்சி பாதையில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னதாக ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் படகில் பயணம் மேற்கொண்டு ஏரிக்கு வந்து செல்லும் பறவையினங்களை ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் உள்ளிட்டோர் பார்வை யிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT