Published : 04 Feb 2021 03:14 AM
Last Updated : 04 Feb 2021 03:14 AM
திருச்சி- புதுக்கோட்டை சாலையில் அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்துக்கு எதிரே பச்சைநாச்சியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலில் கொட்டப்பட்டு இந்திரா நகரைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது அதிகாலை 3 மணியளவில் கோயிலுக்குள் நுழைந்த 2 பேர், ராஜரத்தினத்தை தாக்கி விட்டு அவர் வைத்திருந்த ரூ.4,500 பணம், உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த இரு தங்கக் காசுகள் ஆகியவற்றை கொள்ளை யடித்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT