Published : 04 Feb 2021 03:14 AM
Last Updated : 04 Feb 2021 03:14 AM

திருநெல்வேலி - காந்திதாம் சிறப்பு ரயில் இயக்கம்

திருநெல்வேலி

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள காந்திதாம் வரை, வியாழக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் (எண் 09423) திருநெல்வேலியில் இருந்து பிப்ரவரி 4, 11, 18, 25, மார்ச் 4, 11, 18, 25, ஏப்ரல் 1, 8, 15, 22, 29 ஆகிய வியாழக்கிழமைகளில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமைகளில் பிற்பகல் 2.35 மணிக்கு காந்திதாம் சேரும்.

காந்திதாம் - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (எண் 09424) பிப்ரவரி 8, 15, 22, மார்ச் 1, 8, 15, 22, 29, ஏப்ரல் 5, 12, 19, 26 ஆகிய திங்கட்கிழமைகளில் அதிகாலை 4.40 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

இந்த ரயில்கள் நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மங்களூரு, கார்வார், சூரத், வடோதரா, அகமதாபாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 12 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், இரண்டு சரக்கு மற்றும் காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

12 குளிர்சாதன மூன்றடு க்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x